×

உலகின் முதல் தமிழ் சமூக ஊடகம் மின்மினி ஹைப்பர் லோக்கல் சமூகஊடக செயலி அறிமுகம்

 

உலகின் முதல் தமிழ் சமூக ஊடகம் மின்மினி ஹைப்பர்லோக்கல் சமூக ஊடக செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களிடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன், தமிழர்களின் தோழமை மற்றும் ஒற்றுமை உணர்வை உணரக்கூடிய ஒரே தளமாக, மின்மினி என்ற செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பயனர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளலாம், தனிப்பட்ட மற்றும் பொதுவான குழுக்களை உருவாக்கலாம். மேலும் மற்ற செயலி பயனர்களுடனும் தடையின்றி தகவல்களை பரிமாறிக்கொள்ளலாம்.

இது குறித்து மின்மினி செயலியின் நிர்வாக துணைத்தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: சமூக ஊடகங்களை இதுவரை பயன்படுத்தாதவர்கள் கூட இந்த மின்மினி செயலியை மிகவும் சுலபமாக பயன்படுத்தக்கூடிய எளிய அம்சங்களுடன் செயலி வடிவமைக்கபப்ட்டுள்ளது. மின்மினியில், அங்கீகாரம்(வெரிபைட் டிக்) என்பதை பணம் கொடுத்து பெற தேவையில்லை. நல்ல கருத்துகள், பதிவுகள் மற்றும் அதற்கு கிடைக்கும் மக்களின் வரவேற்பு ஆகியவற்றின் அடிப்படையில் அங்கீகாரமானது நிறுவனத்தால் வழங்கப்படும். அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்கள் “ப்ளூ டிக்“ மூலம் அடையாளம் காணப்படுவார்கள்.

தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான சிறிய கடைகள்ம் அடையாளம் காணப்பட்டு, ‘மின்மினி கடைகள்’ என்ற தளம் உருவாக்கப்படும். மின்மினி கடைகள் மூலம் பயனர்களும் எளிதாக விளம்பரங்களை புக் செய்யலாம், ஹைப்பர் லோக்கல் விளம்பரங்கள் மூலம் அந்தந்த பகுதிகளுக்கே எளிதாக சென்றடையலாம். மின்மினி மூலம் விளம்பரதாரர்கள் இந்தியாவின் கடைசி கிராமங்கள் வரை சென்றடைய முடியும்.

இந்த செயலியானது தமிழகத்தின் ஒவ்வொரு வட்டாரத்திலும் எலக்ட்ரீஷியன்கள், பிளம்பர்கள், கார்பெண்டர்கள் போன்ற ஆயிரக்கணக்கான சேவை வழங்குபவர்களைக் ஒன்றினைக்கும். எனவே அத்தகைய பணியாளர்களை உடனடியாக தேடலாம். தமிழகம் முழுவதும் 40 லட்சத்துக்கும் அதிகமான கடைக்காரர்கள், சேவை வழங்குபவர்கள், தொழில் முனைவோர்கள் மற்றும் வணிகர்கள் இருப்பதாக நாங்கள் மதிப்பிட்டுள்ளோம். அவர்களில் பலரை, மின்மினி செயலிக்குள் டிஜிட்டல் வணிக கொண்டுவர திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

The post உலகின் முதல் தமிழ் சமூக ஊடகம் மின்மினி ஹைப்பர் லோக்கல் சமூகஊடக செயலி அறிமுகம் appeared first on Dinakaran.

Tags : Minmini ,
× RELATED இசையமைப்பாளராக அறிமுகமாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கதிஜா